தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்க கூடாது – அண்ணாமலை

Tamilnadu BJP President Annamalai

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவரை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாச்சாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்டவை தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதற்கு மேலும் சீர்கெட முடியாது. உடனடியாக இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெடிகுண்டு கலாச்சாரத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்