சந்திரயான்-3 படத்தை கேலி செய்த நடிகர் பிரகாஷ் ராஜ்: x தளத்தில் எழுந்த சர்ச்சை!

Prakash Raj

சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டரின், சுற்றி வரும் பாதையின் உயரம் இறுதி டீபூஸ்டிங் மூலம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டரானது ஆகஸ்ட் 23 அன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டரால் நிலவில் எடுத்த முதல் புகைப்படம் என்று கூறி, கார்டூன் புகைபடம் ஒன்றை நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் டீ போடுவது போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை, நிலவில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜின் இந்த செயல் விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை பார்த்த பலர், பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்புக்காக அவர் இந்தப் பதிவைப் பகிர்ந்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இது பிரதமர் நரேந்திர மோடி மீதான “குருட்டு வெறுப்பால்” உந்தப்பட்ட பதிவு என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்