அதிமுக மாநாட்டில் உயிரிழந்த 8 பேருக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்தநாளில் ஒரு சோகமான சம்பவமும் அரங்கேறியுள்ளது, மதுரை மாநாட்டில் பங்கேற்று திரும்பும் போது ஏற்பட்ட விபத்துகளில் 8 அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்துள்ளனர்.
தாற்போது, உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.