#BREAKING: சென்னை சாலைவிபத்தில் சிறுமி உயிரிழப்பு..! லாரி ஓட்டுநர் கைது.!

Arrest

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி லியோரா ஸ்ரீ தனது தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்பொழுது, அருகே வந்த லாரி ஒன்று சிறுமி மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக  தடுமாறிய நிலையில் சிறுமி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுனர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்துக்கு தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்