மணிப்பூர் விவகாரம்..! குழுவின் செயல்பாட்டை எளிதாக்க 25ம் தேதி உத்தரவு.! உச்சநீதிமன்றம்
மணிப்பூர் கலவரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்தது. அவை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் அத்தியாவசிய ஆவணங்களை மீண்டும் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் சரியான செயல்பாட்டை எளிதாக்கும் வகையில் ஆகஸ்ட் 25ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.