ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!
2023 ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதன்படி, ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 தொடரானது வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
ஆசியக்கோப்பை போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது. எனவே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்ட நிலையில், ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், சஞ்சு சாம்சன் ஸ்டாண்ட் பை வீரராக உள்ளார்.
???? NEWS ????
India’s squad for #AsiaCup2023 announced.#TeamIndia
— BCCI (@BCCI) August 21, 2023