நாங்குநேரி சம்பவம் – விசிக சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்…!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை இருவரும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேரில்சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து  திருநெல்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் நிகழும் சாதி ரீதியான பிரச்சினைகளை தடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவர்களே, ஜாதிய மதவாத வெறுப்பு அரசியலை விதைக்கும் போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம் என முழக்கமிட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பாளையங்கோட்டை உதவி ஆணையர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்