பலாத்கார வழக்கு – டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு!
பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து ஆணையிட்டார். டெல்லி மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை இயக்குநர் மீதான வழக்கு குறித்து மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கும் ஆணையிட்டுள்ளார்.