ஆவணி சுபமுகூர்த்தம்.! பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்.!
ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று (21.08.2023) அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150-300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என பதிவுத்துறை அறிவித்திருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் இதுபோல் நடப்பது வழங்கமான ஒன்று. அதன்படி, மக்களும் ஆர்வமாக பதிவு செய்ய வருகை புரிந்துள்ளனர். சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெறும்.
அண்மையில் கூட (ஆடி 18) ஆகஸ்ட் 03 ம் தேதி அன்று, பத்திரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது. அப்போது, அரசுக்கும் ஏரளாமன வரி வருவாய் கிடைத்தது. இந்நிலையில், இன்று நிறைய பத்திரங்கள் பதியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக ஆவணப் பதிவு நடைபெறும் என்பதால், குறைந்தபட்சம் ரூ.200 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.