#BREAKING: காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு – உச்சநீதிமன்றம்
காவிரி விவகாரத்தில் விசாரணை நடத்த இன்றைய தினமே புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அறிவித்தார். காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரும் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை இன்றே அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி அளித்தார்.
அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, புதிய மருவு இன்றே அமைக்கப்படும் என அறிவித்தார்.
கர்நாடக அரசு தன் தரப்பு வாதங்களை முன் வைக்க முயன்றபோது புதிய அமர்வில் வாதிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த கருத்தாக இருந்தாலும் புதிய அமர்வில் முறையிட கர்நாடகாவுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். மிகவும் அவரச வழக்கு என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.