மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் வீடு தேடி வரும் அதிகாரிகள்!
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இதில் விடுபட்டவர்கள், ஓய்வூதியம், உதவித்தொகை பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிப்பதற்கான 3 நாள் சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
தற்போது, விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், இதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் இன்று முதல் விவரங்கள் தேவைப்படும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட உள்ளனர். உரிமைத் தொகை திட்டத்துக்காக இது வரை 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசு சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் விண்ணப்ப பதிவு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பணிகள் தொடங்க உள்ளன.