மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு, மீறினால் உரிமம் ரத்து..! – தேசிய மருத்துவ கவுன்சில்
மருந்து நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் இருந்து மருத்துவர்கள் விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
மருந்து நிறுவனங்கள் நடத்தும் பார்ட்டிகளில் டாக்டர்கள் கலந்து கொள்ள தடை விதித்தும் தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவை மீறும் மருத்துவருக்கு மீறினால், 3 மாத காலத்திற்கு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தேசிய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.