ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!
2023 ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 தொடரானது வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பிரச்சனை மற்றும் பாதுகாப்பு காரணமாக, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன. ஆனால், இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சமயத்தில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை இன்று மதியம் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியை புதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் பங்கேற்க 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.