மதுரை மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை – ஓபிஎஸ்
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளேன் தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான் அடைந்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு விரைவில் நாம் தயாராக வேண்டும் . உண்மையான உறுப்பினர்களை நாம் சேர்க்கப் போவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கண்டிப்பாக நிறுத்த உள்ளோம். அத்தேர்தலில் போட்டியிட்டு நாம் யாரென்று நிரூபிப்போம். அதன்பின் அதிமுக நம்மிடம் வரும்.
மதுரை மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை. பலர் சரியாக சாப்பிடவில்லை. எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாட்டில் கூட்டம் கூடாததுடன், வந்தவர்களுக்கும் சரியான முறையில் உணவுகூட கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.