கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு- எடப்பாடி பழனிச்சாமி!

edappadi palanisamy

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” அதிமுக அரசு மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக  வழங்கியது.

கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் முற்றிலும் அந்த வைரஸ் இல்லாமல் செய்தது நம்மளுடைய அதிமுக தலைமையிலான அரசு தான். அதிமுக அரசு கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டு மக்கள் நலனை காத்தது.   அதைப்போல, கஜா புயலின்போது புயலைவிட வேகமாக செயல்பட்டு பாதிப்புகளை நாங்கள் தான் சீரமைத்தோம்.

புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.2,247கோடி நிவாரணத் தொகை வழங்கினோம். இப்படி பல நல்ல உதவிகளை மக்களின் நலனை கருது எங்களுடைய, நம்மளுடைய அதிமுக கட்சி செய்து கொடுத்துள்ளது. நான் முதல்வராக இருந்தபோது வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்களை எல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ” மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்