அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது! மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!

EdappadiPalaniswami

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். பட்டி மன்றம் கலைநிகழ்ச்சி என கோலாகலமாக இந்த மாநாடு நடந்தது.

இந்த நிலையில், மாநாட்டின் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ” கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய கட்சி அதிமுக. தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி தான்.  இது அதிமுகவின் பொன்விழா ஆண்டு 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம். நம்மளுடைய கட்சி அவ்வளவு பெரிய கட்சி.

அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் எந்த கட்சியாலும்  அசைக்க கூட முடியாது.  ஏனெனில் அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். இங்கே உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளிகள் தான். அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை தான்” எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பிரமாண்ட மாநாட்டில் “புரட்சித்தமிழர்” எடப்பாடி பழனிசாமி சர்வ சமய அமைப்பினர் சார்பாக பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிக்கப்பட்டது. புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்