மாணவர்கள் உயிரிழப்பு பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை! போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

Durai Murugan

நீட் தேர்வை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

போராட்டத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன் ” திமுக இளைஞர்அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகிய அணியில் நான் இல்லையென்றாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து இன்று நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நான் பங்கேற்றுள்ளேன். நீட் தேர்வை நாட்டிலேயே நாம் மட்டும்தான் எதிர்க்கிறோம். மாணவர்களுடைய நலனை கருதி மட்டும் தான் நீட் தேர்வினை எதிர்த்து வருகிறோம்.

இந்த நீட் தேர்வு ஆதிக்கக்காரர்களால் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை இழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கல்வியாளர்களும் கூறி வருகின்றனர்.
இதுவரை பல மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்கள் பற்றி மத்திய அரசுக்கு எந்த கவலையில்லை ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது.

இந்த நீட் தேர்வை எதிர்ப்பதில் அமைச்சர் உதயநிதி முழுமூச்சாக உள்ளார். கண்டிப்பாக உதயநிதி காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது என்றால் அது வரலாற்றில் இடம்பெறும். கண்டிப்பாக அவரால் முடியும் அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது என இந்த மாபெரும் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எனவே அவருடைய போராட்டம் வெற்றி பெற வேண்டும் அவருக்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும்” எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்