அதிமுக மாநாடு – மதுரை வந்தடைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!

Edapadi palanisamy

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிடபட்டுள்ளது. மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் பின்புறம் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, வீடியோ காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறித்த பிரமாண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து கண்காட்சி மற்றும் நவீன தொழில்நுட்ப மூல வீடியோ காட்சி ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 20 லட்சம் தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை, நடைபெறும் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று மதுரை  வந்தடைந்துள்ளது. இந்த  நிலையில், மாநாட்டில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மதுரை வந்தடைந்தார். அவருக்கு அதிமுக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்