உக்ரைன் டிரோன் தாக்குதலுக்கு ஒரே இரவில் பதிலடி கொடுத்த ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஓய்ந்த பாடில்லை, அவ்வப்போது தாக்குதல் சம்பவம் மாறிமாறி நடந்து கொண்டே தான் இருக்கிறது. சுமார், 500 நாட்களை கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா வின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த டிரோனை மாஸ்கோவில் அமைந்திருந்த வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீது ரஷ்யா அதிகாலை இன்று வடக்கு, மத்திய மற்றும் மேற்கு உக்ரைனின் சில பகுதிகளுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ட்ரோன்களை மாஸ்கோ ஏவியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாகவும், இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.