வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் என்ன அகும்? சிவசேனா எம்.பி. கருத்து!

Priyanka Gandhi - Priyanka Chaturvedi

சிவசேனா (யுபிடி) தலைவரும் எம்பியுமான பிரியங்கா சதுர்வேதி, பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தால் எதிர்க்கட்சி கூட்டணி அவருக்கு ஆதரவளிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கு, பிரியங்கா காந்தி வெற்றிபெறச் செய்ய எதிர்க்கட்சி கூட்டணி ஒத்துழைக்கும் என்று,  சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து பேசிய சிவசேனா எம்பி, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, எந்த தொகுதிக்கு யார் பொருத்தமானவர் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.

எதிர்க்கட்சி கூட்டணியால் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அதிர்ந்து போனதால், நாடாளுமன்றம் முதல் செங்கோட்டை வரை எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சித்து வருவதாக கூறியுள்ளார்.

முன்னதாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் ராய் கூறுகையில், ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதியில் போட்டியிடுவார் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்