இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பஸ் சோதனை ஓட்டம் லடாக் சாலைகளில் தொடக்கம்..!
அரசுக்கு சொந்தமான மின்சார நிறுவனமான என்டிபிசி, லாடாக்கின் லே பகுதியில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பேருந்துகளின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பொதுச் சாலைகளில் ஹைட்ரஜன் பேருந்துகளை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பேருந்து ஆகஸ்ட் 17 அன்று லேயை அடைந்தது.
இது மூன்று மாத கால களச் சோதனைக்கு பிறகு வந்துள்ளது. லேவின் உள்வழி பாதைகளில் இயங்குவதற்கு எரிபொருள் கலத்துடன் இயங்கும் 5 பேருந்துகளை என்டிபிசி வழங்குகிறது.