காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்பதில் உண்மையில்லை.! கே.எஸ்.அழகிரி பேட்டி.!
அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் பொறுப்பில் கே.எஸ்.அழகிரி உள்ளார். அவருடைய பதவிக்காலமானது முடியவுள்ளதால், அவர் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படலாம் என தகவல்கள் பரவின.
இந்நிலையில், நேற்று பெங்களூரு சென்றிருந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு முடிந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறார் என்ற செய்தியில் உண்மையில்லை என தெரிவித்தார். என்னுடன் வந்தவர்கள் என்னுடைய ஆதரவாளர்கள் அல்ல அவர்கள் எனது 50 ஆண்டுகால நண்பர்கள் என தெரிவித்தார்.
மேலும் , மல்லிகார்ஜுன கார்கேவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தலைவர் மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.