நீட் தேர்வு ரத்து.! பொய்யான வாக்குறுதிகள்.! திமுக மீது வானதி சீனிவாசன் கடும் குற்றசாட்டு.!
பாஜக நெசவாளர் அணி சார்பாக நேற்று தேசிய கைத்தறி தின விழா கொண்டப்பட்டது. இந்த விழாவில் நடைபெற்ற ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
இந்த விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நீட் தேர்வு ரத்து பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது . தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
நீட் தேர்வால் உயிரிழக்கும் ஒவ்வொரு மாணவர் உயிருக்கும் திமுக தான் பதில் சொல்ல வேண்டும். நீட் தேர்வால் நடக்கும் ஒவ்வொரு தற்கொலைக்கும் தமிழக முதல்வர் தான் பொறுப்பு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பிரதமர் மோடி, மீனவ மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை ஏற்க முடியாது.மீனவர்களுக்கு பிரதமர் மோடி நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். என்றும் , ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.