அமர்நாத் யாத்திரை.. 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நபர் பலி..!
அமர்நாத் யாத்திரையின் போது ஒருவர் தண்டவாளத்தில் இருந்து 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த்துள்ளார்.
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் பகுதியில் உள்ள தும்பா கிராமத்தில் வசிக்கும் விஜய் குமார் ஷா என்ற யாத்ரீகர், புனித அமர்நாத் குகையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்தவர்களை மலை மீட்புக் குழு மற்றும் இராணுவதினர் மீட்டனர். ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை. மற்றொரு யாத்ரீகர் காயமடைந்தார்.