ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்..! தங்கம் வென்றது இந்தியா..!

World Shooting Championships

அஜர்பைஜானின் பாகுவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்களான இஷா சிங் மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர், கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதனால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் துருக்கியின் இலேடா தர்ஹான் மற்றும் யூசுப் டிகெக் ஜோடியை தோற்கடித்து நாட்டின் பதக்க எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது.

முன்னதாக, அணி வெண்கலத்தை தொடர்ந்து ஷிவாவுக்கு இது இரண்டாவது பதக்கம் ஆகும். இந்தியா தற்போது ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், சீனா சீனா 16-2 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி கலப்பு ஏர் ரைபிள் தங்கம் வென்றது.

ஒட்டுமொத்தமாக சீன வீரர்கள் 5 தங்கம் மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். மேலும்,  ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் கலப்பு அணி தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்