கலைஞர் நூற்றாண்டு விழா – திமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது!
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், 23 அணிகளின் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டை கொண்டாட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது.