மணிப்பூரில் மீண்டும் 3 பேர் சுட்டு கொலை.! பிரதமரால் ஏன் தடுக்க முடியவில்லை என காங்கிரஸ் கடும் விமர்சனம்.!

Manipur Riots in Ukhrul

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் வன்முறை சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுது நாட்கள் வன்முறை சம்பவங்கள் பெரிய அளவில் நிகழலாமல் இருந்த நிலையில் நேற்று அதிகாலை மணிப்பூரில் உக்ரோல் மாவட்டத்தில் தவாய்குக்கி பகுதியில் 3 குக்கி இன தன்னார்வலர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவாய்குக்கி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த குக்கி இனத்தை சேர்ந்த தன்னார்வலர்களை ஒரு கும்பல் சுட்டுக்கொன்றுள்ளது.  அவர்கள் உடலில் துப்பாக்கி குண்டுகள் காயங்கள் மட்டுமல்லாது கூரிய ஆயுதங்களால் தாக்கபட்ட காயங்களும் இருதத்த்தாக கூறப்படுகிறது. இந்த கொலைகளை மைத்தேயி இனத்தை சேந்த கும்பல் நிகழ்த்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அப்பகுதி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சிறுது நாட்கள் பெரிய வன்முறைகள் நிகழாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வன்முறை அரங்கேறியிருப்பது பல்வேறு பகுதிகளில் மீண்டும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தனது கண்டனத்தை X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், மணிப்பூர் வன்முறையில் மீண்டும் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் கடந்த பல மாதங்களாக எரிந்து வருகிறது. மக்கள் பயத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏன் பிரதமர் மோடியால் மணிப்பூர் வன்முறையை தடுக்க முடியவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்