பெண்களுக்கு ஏற்படும் சிறிய குறைபாடும் கருவுற்றிருக்கும் நிலையை பாதிக்கும் : ஆய்வில் தகவல்
தெலுங்கானா அரசின் பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வளர்ச்சி துறையின் செயலகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஐதராபாத்தில் உள்ள பொதுசுகாதாரத்துறை கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது. குறைபாடுள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சாதாரண பெண்கள் மற்றும் குறைபாடு உள்ள பெண்களின் விகிதம் 1:1.3 ஆகும். அதாவது குறைபாடற்ற பெண்கள் 247 பேர் இருப்பின், குறைபாடு உள்ள பெண்கள் 324 பேர் உள்ளனர். அதன்படி உலகில் மொத்தம் 15 சதவீதம் பொதுமக்கள் குறைபாடுடன் வாழ்கின்றனர்.
இந்நிலையில், சாதரண பெண்களை விட குறைபாடு உள்ள பெண்கள் குறைவான கர்ப்ப விகிதத்தை கொண்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பாதிப்பு இருந்தாலும் அது குழந்தை பிறப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது