நாங்குநேரி விவகாரம்..! விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை..!
இன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நாங்குநேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்படி, நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், இந்த ஒரு பிரச்சனையை மட்டும் விசாரிக்கக் கூடாது
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.