தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் முடக்கம்!

website down

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துநர்  பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக பணியிடங்களுக்கு இன்று மதியம் 1.00 மணி முதல் வரும் செப். 18ம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கியது. இப்பணியிடங்களுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல்  http://arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது.

இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் சிரமத்துக்குள்ளானர்.  ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இணையதளத்தை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறினர். அந்தவகையில் முடங்கிய இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்