வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரத்தில், தென் மண்டல திமுக பிரமுகர்கள் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் பிரமாண்ட மீனவர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு செல்லும் வழியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திமுக எம்பி கனிமொழி, உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை.’ என அப்துகலாமின் பொன்மொழியை பதிவிட்டுள்ளார்.
“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை.
வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை.”
– முன்னாள் குடியரசுத் தலைவர் #APJAbdulKalam#Motivation pic.twitter.com/Zwcs4Ge3Nf
— M.K.Stalin (@mkstalin) August 18, 2023