பீகாரில் பத்திரிகையாளர் பிமல் யாதவ் சுட்டுக் கொலை..! பாஜக கண்டனம்..!
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பத்திரிகையாளர் பிமல் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “ஒரு பத்திரிக்கையாளருக்கு இப்படி நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. அதை விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பத்திரிகையாளர் பிமல் யாதவ் மீதான இந்த தாக்குதலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.