அதிமுகவின் பிரமாண்ட மாநாடு… 15 லட்சம் பேருக்கு விருந்து..! இறுதி கட்டத்தில் ஏற்பாடுகள்!

aiadmk maanaadu

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை மறுநாள் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடத்தில் பின்புறம் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, வீடியோ காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறித்த பிரமாண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து கண்காட்சி மற்றும் நவீன தொழில்நுட்ப மூல வீடியோ காட்சி ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 20 லட்சம் தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 20க்கும் இறப்பட்ட இடங்களில் உணவருந்தும் வகையில் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 15 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சமையல் பணிகளில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று இடங்களில் உணவு தயாரிக்கபடுகிறது. மாநாட்டு அன்று காலை முதல் மாலை வரை உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று, தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்