நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற முழு பொறுப்பை நான் உணர்கிறேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்ன விமர்சனம் வந்தாலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள்; தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக போல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற மாட்டோம்; மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எல்லோரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.