நிலவின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்!

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த பிறகு, நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பியதாக அந்நாட்டின் மாநில விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆய்வு மையம், லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

விண்ணில் செலுத்தப்பட்ட லூனா-25யானது, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்தார். ஆனால், ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், ஆகஸ்ட் 23 தேதி தரையிறங்கும் என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் தரையிறங்க ஏதுவான நேரத்தில் நிலவில் லூனா-25 தரையிரங்கும் என கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்றைய தினம் லூனா-25 விண்கலமானது பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செலுத்தப்பட்டது என தகவல்கள் வெளியானது. அதன்படி, இன்று சுற்றுப்பாதையில் சுற்றி வரும் லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

luna-25 send moon pic
luna-25 send moon pic [File Image]

லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி, வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா உள்ளிட்ட முக்கிய ஆய்வுக்காக ரஷ்யா லூனா-25ஐ விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்