இந்த மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!
தென்காசி மாவட்டத்தில் புலித்தேவரின் 308-வது பிறந்தநாள் மற்றும் ஒண்டிவீரனின் 252 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்காக இன்று முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது சிவகிரி அருகே பச்சேரி கிராமத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல் புலி தேவர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 30 மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2 காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.