குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, 2ம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.07.2022 அன்று நடைபெற்று. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, 2ம் கட்ட கலந்தாய்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி. குரூப்-4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் செப்.11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு நவம்பர் 20 முதல் 26 வரை நடைபெறுகிறது.
முதல் கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.