பிச்சை எடுக்க குழந்தைகளை வாடகைக்கு எடுக்கவில்லை – ஆட்சியர் விளக்கம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவது உண்டு. இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்டுத்தி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளன்ர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது ரூ.500 குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் விளக்கமளித்தார்.
அவர் கூறுகையில், திருச்சியில் பிச்சை எடுக்க குழந்தைகளை யாரும் வாடகைக்கு எடுக்கவில்லை. அம்மா மண்டபம் படித்துறையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தோர் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள நிலையில், உறவினர்களின் குழந்தைகளைக் கொண்டு பிச்சை எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.