காதலிக்க மறுத்ததால் தாயின் கண்முன்னே மகளை வெட்டிய இளைஞன்..!
மும்பையில் கல்யாண் பகுதியிலுள்ள டிஸ்கானில் உள்ள துர்காசதண் சொசைட்டியில் பிரணிதா தாஸ் என்ற சிறுமி தனது தாயுடன் டியூசன் முடிந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆதித்யா காம்ப்ளே என்ற இளைஞர் சிறுமியை தாயின் கண் முன்னே கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து அவரது தாய் தடுக்க முயன்ற போது தாயையும் தள்ளிவிட்டு மீண்டும் தாக்கியுள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஆதித்யா 12 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியிடம் ஏற்கனவே ஆதித்யா தெரிவித்த நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த சிறுமியை கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் காயமடைந்த நிலையில் ருக்மணி பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.