தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்துங்கள் – கர்நாடக முன்னாள் முதல்வர்!

BasavarajBommaiLetter

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கர்நாடகா காங்கிரஸ் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழலை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதை அடுத்து காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்ததும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தில் ஒருமித்த கருத்து இல்லை.

கர்நாடகா விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்துள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசின் அணுகுமுறையால் கர்நாடக காவிரி படுகை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை என்பதால் உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு சுமார் 14,000 கன அடி திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்