2 நாள் பயணமாக லடாக் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

இரண்டு நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
அதாவது, இந்த ஆண்டு ஜனவரியில் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்குச் சென்றார். இதனை தொடர்ந்து, பிப்ரவரியிலும் அவர் மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டார், ஆனால் லடாக் செல்ல முடியவில்லை. இந்நிலையில், 2-வது நாள் பயணமாக இன்று லடாக் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பெல்ஜியம், நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பா சுற்றுப்பயணத்தையும் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025