வார இறுதி நாட்கள்! 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வார இறுதி மற்றும் தொடர் வளர்பிறை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு கூடுதலாக 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் எவ்வித சிரமன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு நாளை கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து தினசரி ஓடும் பேரூந்துகளுடன் நாளை 500 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
பெங்களூரிலிருந்து கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் வசதிக்காக ஞாயிறன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.