அமைச்சரின் காலில் விழுந்த போக்குவரத்து ஊழியர்.! பணியிட மாற்றம் அளித்த தமிழக அரசு.!

Minister Sivasankar - Driver

கோவையில் அமைச்சர் சிவசங்கரின் காலில் குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் கண்ணனின் பணிமாறுதல் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு, அவரை தேனிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாண்வர்களுக்கு சாண்றிதர்களை வழங்கியதோடு, ஊழியர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டர்.

அப்போது, கோவையில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் திடீரென தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என கண்ணன் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பணி மாறுதல் கோரி 6 மாத குழந்தையுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனை, அவர் விருப்பப்படி பணியிட மாற்றம் செய்து நேற்றிரவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., கோவை மண்டலம், கங்கம்-1 கினையில் பணிபுரியும் திரு.P.கண்ணன், ப.எண்:C29307, ஓட்டுநர் என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை மண்டலத்திற்கு நிரந்தர ஒருவழி மாறுதல் கோரியதற்கு, பார்வை-1ன் மூலம் இசைவு கோரப்பட்டது.

பார்வை-2ல், மேற்படி பணியாளரை நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில் திண்டுக்கல் மண்டல தேனி கிளைக்கு ஈர்த்துக் கொள்ள தெரிவிக்கப்பட்ட இசைவினைத் தொடர்ந்து, பணியாளரை நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், திண்டுக்கல் மண்டலத்திற்கு, வழக்கமான சட்டதிட்டங்களுக்குட்பட்டு மாறுதல் செய்து உத்தரவிடப்படுகிறது.

மேற்படி பணியாளரை, வழக்கமான சட்டதிட்டங்களுக்குட்பட்டு இக்கழகத்திலிருந்து விடுவித்து, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், மதுரை அவர்கள் முன்பு ஆஜராக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்