அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில் தான் திமுகவின் போராட்டம் – இபிஎஸ் விமர்சனம்

Edappadi Palanisamy

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.

மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டமும் தொடங்கப்பட்டது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் தமிழகத்தில் நீட் விலக்குக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அணியினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அணி நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அதிமுகவின் மதுரை மாநாடு நடைபெறும் அதே நாளில் திமுக திட்டமிட்டே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ், அதிமுகவின் மாநாட்டை கண்டு பயந்து, நடுங்கி என்ன செய்வது என்று அறியாமல், வரும் 20ம் தேதி நீட் தேர்வை மையமாக வைத்து அமைத்து உதயநிதி ஸ்டாலின் அறவழியில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பத்திரிகை செய்திகளில் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில் திமுக போராட்டம் என்பது வேண்டுமென்றே திட்டமிட்டுள்ளதாக கருதுகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய திமுக முயற்சி எடுத்து வருகிறது. இந்த முயற்சியை அதிமுக ஏற்கனவே எடுத்துவிட்டது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நாங்கள் என்ன செய்தமோ, அதை தான் திமுகவும் செய்து வருகிறது. வேறு என்ன புதுசா கண்டுபிடித்து உள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது காரணத்தால் நாடாளுமன்றத்திலயாவது நீட் தொடர்பாக கேள்வி எழுப்புவார்கள் என பார்த்தால் அதுவும் இல்லை என திமுகவை இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்