போக்சோ சட்ட விழிப்புணர்வை பாடப்புத்தகங்களில் சேர்க்க கேரள அரசு முடிவு!

POCSO law awareness in textbooks

கேரளாவில் 2024 ஆம் ஆண்டு முதல் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம், இது வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கேரள உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி, நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், குழந்தைகள் ஒருமித்த உறவில் ஈடுபட்டிருந்தாலும் கூட, POCSO சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்ட விதிகளை நன்கு அறிந்திருக்கவில்லை என்பது குறித்தும் கவலை தெரிவித்திருக்கிறார்.

பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, இந்த பாடப்புத்தகங்கள் உரிய முக்கியத்துவம் மற்றும் உணர்திறனுடன் பாடத்தை கையாளும் நிபுணர்களால் தயாரிக்கப்படும் என்று SCERT வலியுறுத்தியது.

அதன்படி, 1, 3, 5, 6, 8, மற்றும் 9ம் வகுப்புகளுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் POCSO சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஒருங்கிணைக்கப்படும் என்றும் SCERT நீதிமன்றத்திற்கு உறுதியளித்தது. மேலும், 2,4,7 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு இந்த ஒருங்கிணைப்பு பாடப்புத்தகம் 2025-2026 கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த ஆண்டின் மே மாதம், போக்ஸோ விழிப்புணர்வு பாடங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டதையும் மாநில அரசு மேற்கோள் காட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்