இந்த கோவிலின் விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகள் இயக்க வேண்டும் – விஜயகாந்த்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரி முத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ள நிலையில், பேருந்து வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரி முத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் பக்தர்கள் தங்களது
நேர்த்திக்கடனை சிறப்பாக செய்ய காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், @CMOTamilnadu நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/1TRkZPtxdX
— Vijayakant (@iVijayakant) August 16, 2023