கைவினைஞர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும்..! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தை நேற்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய நிலையில், இன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்தத் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் கீழ், ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்கப்படும்,” என்றும் கூறினார்.