நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்ற கோரி அவரது தந்தை மனு..!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி மனு அளித்துள்ளார். சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும், முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாகவும் சித்ராவின் தந்தை மனுவில் தகவல் அளித்துள்ளார்.