‘உன்னை அடிப்பேன்’ பொது இடத்தில் நகராட்சி ஆணையரை மிரட்டிய எம்.எல்.ஏ..!
மும்பையின் வசாய்-விரார் எம்.எல்.ஏ ஹிதேந்திர தாக்கூர், சுதந்திர தின விழாவின் போது, அப்பகுதியின் நகராட்சி ஆணையர் அனில் குமார் பவாரை பொது இடத்தில் மிரட்டியுள்ளார்.
சுகாதார பிரச்சினைகள், தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கும்போது, நகராட்சி ஆணையர் மூன்றரை ஆண்டுகளாக நிர்வாக தோல்வியில் ஈடுபட்டதாக எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.
மேலும், “நீங்கள் உங்களை ஒரு ராஜாவாக கருதுகிறீர்களா? நான் அலுவலகத்திற்கு வந்து உங்களை அடிப்பேன்” என்று கூறியுள்ளார்.