தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுகிறார்? அடுத்த தலைவர் இவர்தானா?

tn congress president

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கேஎஸ் அழகிரி பதவி வகித்து வருகிறார். 5 ஆண்டுகாலம் பதவியில் உள்ள கேஎஸ் அழகிரி மாற்றப்பட்டு இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் மாதமே டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

காங்கிரஸ் தலைமை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கேஎஸ் அழகிரி பங்கேற்றார் டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தல் எனக்கு மகிழ்ச்சி தான், நான் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன் எனவும் தற்போதைய தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சி  நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன.

செல்வப்பெருந்தகைக்கு பதில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை, இன்று மாலை காங்கிரஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்